கல்வி
இந்தச் சுவரில்லாப் பள்ளி ஒரு சுயகற்றல் மையமாகும். இங்கு ஆசிரியர்களுக்குப் பதிலாகக் கற்றல் திறன்களை முழுமையாகச் சாத்தியப்படுத்தும் அல்லது மேம்படுத்தும், கற்றல் சூழ்நிலையைச் சிறப்பாக உருவாக்கித்தரும் அல்லது பராமரிக்கும் வல்லுனர்கள் இருப்பார்கள். இது உணவுடன் கூடிய உண்டு உறைவிடப் பள்ளி ஆகும். இவ்வளாகத்தில் தமிழ் மரபு,கலை, பண்பாடு, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றைக் கற்றறியலாம். அறிவியல் தொடர்பான புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். இலக்கியங்களில் புதியனவற்றைப் படைக்கலாம். விவசாயத்தை எளிய முறையில் கற்கலாம்.