எங்களைப் பற்றி


நம்மாழ்வார் வழிவந்த இயற்கை வழி விதைப் பண்ணை உருவாக்கக்கூடிய பட்டதாரி இளைஞர்களாகிய நாங்கள் ஒன்றுகூடி இந்த அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளோம்.இதன் மூலம் இயற்கை விதைப் பண்ணை, விவசாயப் பொருட்கள் மதிப்புக் கூட்டுதல், இயற்கை உணவு செய்முறைப் பயிற்சி மற்றும் இயற்கை உணவைப் பயன்படுத்தி இயற்கை வழி மருத்துவம், மாற்று மருத்துவ முறையில் மருந்தில்லா மருத்துவம், , தமிழ்மரபு, கல்வியில் அனைத்துத் தமிழ் மரபு சார்ந்த கலை, பண்பாடு, இலக்கியம், தற்காப்புக் கலை ஆகியவற்றைக் கற்று அறியலாம். இங்கு தமிழ் மரபு மற்றும் அறிவியல் சார்ந்த அனைத்துத் தொழில்களும் கற்றுத்தரப்படும்.

ஒற்றை வைக்கோல் புரட்சி - திரு. மசனோபு புக்குவோக்கா


விதைகளே பேராயுதம் - டாக்டர் நம்மாழ்வார்


ஜீரோ பட்ஜெட் விவசாயம் - திரு. சுபாஷ் பலேகர்


வணிக மையம்

யூடியூப் சேனல் தேனகம்

என்னுடைய இயற்கை உணவு செய்முறைப் பயிற்சி இப்போது இந்தத் தேனகம் என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் கண்டு பழகிக் கொள்ளலாம் நன்றி.

கற்றல் மையங்கள்

அகத்தியர் வாழ்வியல் நடுவம்

மொழியின் தோற்றம், தமிழ் மொழி வரலாறு, தமிழின் வரிவடிவ வளர்ச்சி, இலக்கணங்களின் தேவை.

திருவள்ளுவர் தமிழ்க் குடில்.

முதல் நிலை: குறள் ஒப்புவித்தல் /பொருள் அறிதல். இரண்டாம் நிலை: குறள் சிந்தனைகளை வாழ்வியலுடன் ஒப்பிடுவது. மூன்றாம் நிலை: பிற இலக்கியங்களுடன் அதனை ஒப்பிடுவது, விவாதங்கள் செய்தது. நான்காம் நிலை: குறள் ஆராய்ச்சி, திறனாய்வு.

இராமானுஜர் கணித நடுவம் .

எண்கள், கூட்டல், பெருக்கல், கழித்தல் ,வகுத்தல், அளவைகள், கோணங்கள், வாய்பாடுகள்.

விவேகானந்தர் திறன் மேம்பாட்டுத் தளம்

ஆன்மிகம், தனிமனித ஒழுக்கம் ,தத்துவம்.

பாரதியார் தமிழ்ப் பண்பாட்டு நடுவம்

புதுக்கவிதை, புரட்சிச் சிந்தனை, உரைநடை, பண் வகைகள் அறிதல்.

தொல்காப்பியர் இலக்கணக் கூடல்

எழுத்து, சொல், பொருள் இலக்கணங்கள், எழுத்துகளின் பிறப்பு,ஒலிப்பு முறைகள், சொல் உருவாக்கம், சொற்களின் வகைகள், சொற்களைப் பயன்படுத்தும் முறைகள், வாழ்விலக்கணம், தமிழரின் சமூக வாழ்க்கை முறை, இல்வாழ்வு(நட்பு, காதல், திருமணம்).

கம்பர் அரங்கம்.

இலக்கியங்கள், காப்பியங்கள், படைப்பாற்றல், கவியாற்றல்.

இராஜராஜன் வரலாற்றுப் பெட்டகம்

தமிழரின் அரசியல், போர்முறை, ஆட்சிமுறை, பல்வேறு தொழில்நுட்பங்கள், கடல் கடந்த வாணிபம்,கலை வளர்த்தல்.

சர்.சி.வி.இராமன் அறிவியல் மையம்

அடிப்படை அறிவியல்,ஆற்றல், வேகம் ,ஒலி-ஒளி அறிதல், சூழல் அறிவியல், மின்சாரம், தனிமங்கள், இரசாயனங்கள், உயிரியல்.

ஜி.டி.நாயுடு புதுமைச் சிந்தனையகம்.

புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் சிந்தனை, தொழில்துறை.

ஆரியபட்டர் வான்வெளி முற்றம்

வானியல், கோணங்கள், பின்னங்கள், அளவியல், சமன்பாடுகள், எண்கள்.

தேனகம் இயற்கை வாழ்வியல் நடுவம்.

உடல் ,உள்ளம், உயிர் ஆகிய இம்மூன்றையும் ஒப்பற்ற உயர்நிலைக்குப் பயிற்றுவிக்கும், இயற்கைச் சூழ்நிலையில் அமைந்த அற்புதமான உணவுடன் கூடிய வாழ்வியல் நடுவம். சுய சார்பு வாழ்வியல் முறை, இயற்கை உணவு செய்முறை ஆகியவற்றைக் கற்றறியலாம்.